நீண்டு வளர்ந்த பனைக்கூடல்கள்
நிலவை மறைத்திருந்தது
இருந்தும்
ஊடறுத்து விழும் பொன்னொளி
மணலில் வெண்மையாக
தவள்ந்தது
மெதுவாக வீசிய காற்றில்
காய்ந்த ஓலைகள்
லேசாக சலசலத்தது
காகங்கள் விழித்துக்கொள்ள
என்னும் கொஞ்ச நேரம் இருக்கின்றது
பின்னிரவின் நிசப்தம்
முனிகள் நடமாடும் நேரம் என்று
முன்பு சொல்லக்கேட்டதுண்டு
இருந்தும்
அந்தப் பயம்
செத்துப்போய்
நீண்ட நாள் ஆகிவிட்டது
நிலவுக்கு எதிர்ப்புறம்
சாய்ந்திருந்த அவளில்
நிலவொளி விழவில்லை
வெறுமை மிஞசிய வாழ்வில்
கருவாட்டின் கண்கள் போல்
விழிகள் காய்ந்திருந்தன
இந்த பனைக்கூடலுக்குள்
சிங்கள சிப்பாய்களின்
துப்பாக்கிச் சன்னங்கள்
சொந்தங்களை
சல்லடைபோட்டு
தொலைந்து விட்டது
இருந்தும்
சன்னம் பாய்ந்த பனைகள் சில
சாய்ந்து கொள்ள
நிமிர்ந்து நிற்கின்றது
எறிகணைகளை தாங்கி
முறிந்த பனைகளில்
பச்சைக்கிளிகள்
சத்தம் போடாமல்
குந்தியிருக்கின்றது
தூரத்தே சப்பாத்துகள்
கீழே விழுந்த ஓலைகளை
நெருக்கும்
சத்தங்கள் கேட்டது
மெல்ல எழுந்து வீட்டுக்குள் போனாள்
ஏணைக்குள் பிள்ளை
வெறும் சூப்பிப்போத்தலை
உவிந்தபடி
தூங்கி கொண்டிருந்தது
அவள் வாழ்க்கையின் சூனியத்தை
மழலையின் மெல்லிய மூச்சொலி
கலைத்துக்கொண்டிருந்தது…
Subscribe to:
Post Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
அழகான குளத்தில் அலையில்லாத நீரின் நெளிவுகள் ஆற்றின் ஓரத்தில் வழைந்து படபடக்கும் நாணல்கள் காலைகளில் வயல் வெளிகளில் பயின் நுனியில் இருந்து யோ...
No comments:
Post a Comment