சிதைவுகளின்
செதிலங்களில்
உயிர்வாழும்
ஒரு இனம்
ஈழத் தமிழினம்
சிதைவுகளில் நின்று
செதிலங்களை கொண்டு
அழகான கோபுரம் ஒன்று
செய்யும் சிற்பிகளின்
உளிகளில்
இரத்தம் கசிகின்றது
வியர்வையும் கண்ணீரும்
வழிந்தோடுகின்றது
கழைத்து கழைத்து
உயிர்கள் பிரிந்து
உடல்கள் சரிந்து வீழ்கின்றது
கவலைகளும் கதறல்களும்
படல்களாக விரிகின்றது
காலத்தின் இலக்கியம்
கண்ணீரில் எழுதப்படுகின்றது
எங்கள் காலத்தை
இலக்கியக் கண்ணாடியில்
தெளிவாகப் பார்க்க முடியாது
எங்கெல்லாம் குழந்தைகள்
உயிர்வதையில் கத்துகின்றார்களோ
அங்கெல்லாம் பார்க்க முடியும்
எங்கெல்லாம் மனிதனை மனிதன் பிணமாக்கிறானோ
அங்கெல்லாம் பார்க்க முடியும்
எமது குருதியை தெளித்து
சதைகளால் புள்ளிவைத்து
போடப்பட்ட உயிர்க்கோலங்கள்
எங்களை எப்போதும் வரவேற்றுக்கொண்டிருக்கும்
இடுகாடுகள் மீது பயம் நிச்சயமாக இல்லை
பாசம் நிரம்ப இருக்கின்றது
அங்கேதான் எமது உறவும் உணர்வும்
இன்னும் புதைந்து கிடக்கின்றது
எமது வாழ்வும் இனி
அங்கிருந்துதான் ஆரம்பிக்கும்.
Tuesday, November 27, 2007
Subscribe to:
Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...