பிஞ்சு நாற்றுகள் வளரந்து
கன்னியாகி விட்டது
களைகளும் கன்னியில் ஆசைப்பட்டு
வளரத் தொடங்கி விட்டது
அகண்ட வயற்பரப்பில்
நீண்ட வரிசையில்
நாரிகள் வானம் பாரத்து
கண்கள் பயிரைப்பாரத்து
கைகள் களைகளை மேயும்
வெயில் ஏற ஏற
காலடி தண்ணியும் சுடும்
நாரியில் படும் வெயில்
உப்பை காச்சி வெளியேற்றும்
முகிலுக்குள் சூரியன் மறைய
தென்றல் சற்று தேகத்தை உலர்த்தும்
வேர்வை காய்ந்து
வெள்ளை உப்பு
வரிக்கோலம் போட்டிருக்கும்
ஆடைமறைக்காத நாரியில்
தொப்பழங்கள்
களைகளைப்போல்
முளைக்கும்
உடைந்த கொப்பழங்களில்
உப்பு வேர்வை நுழைய
எரிவெடுக்கும்
நாரி உழையும்
களைளை பிடி கட்டி
வரப்பில் எறியும் சாட்டில்
சற்று நிமிரும் போதும்
கண்காணி கத்துவான்
நாரையும் கொக்கும்
போட்ட எச்சங்கள்
வெள்ளையாய் காலடியில்
மிதிபடும்
பத்துமணிக்கும் நாலு மணிக்கும்
தேத்தண்ணி
சரையில் சுற்றிய
சக்கரையை கடித்து
தேத்தண்ணி குடிக்க
தேக நடுக்கம் குறையும்
அந்த பத்து நிமிட பொழுது
பள்ளியறையை விட சுகம்
மாலை வரும் போது
மனதும் மகிழும்
ஒய்வென்ற ஒன்று தரும் சுகம்
அடித்து படுக்க போட்ட
அசதியான நித்திரை
இடையில் கணவன்
இடைஞ்சல்கள் செய்தது
விடிய சில வேளை
நினைவில் வராமல் போகலாம்
வேதனைகளை சுமந்து
அடுத்தநாள் விடியும்
வயற்காடு நோக்கி
வாழ்க்கை விரட்டும்
வானத்தைப்பார்து
பெரு மூச்சு ஒன்று விட்டபடி
மனதை முந்தி
கால்கள் நடக்கும
சில சமயம்
வலியிலும் வேதனையிலும்
வெளிவரும் கண்ணீரை
துடைக்க தேவையில்லை
காலடித்தண்ணீருடன்
கலந்துவிடும்
நிமிர்ந்து ஏன்அழப்போகின்றோம்
அழுவது தெரிவதற்கு?
தெரிந்தென்ன இந்த
நீதி கெட்ட உலகத்தில்
தண்ணீரோடு கலந்த கண்ணீரை
பயிரின் வேர்கள் உறிஞ்சும்
நாளை பொன் குவியல்களால்
நெற்கள் குவியும்
சோறாக பொங்கி சரியும்
அவைகளில்
அவள் முகம் தெரியும்
காட்சிகளும் சாட்சிகளும் இன்றி
கண்ணீர் சிரிக்கும்
-சின்னா
Subscribe to:
Post Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...
No comments:
Post a Comment