
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பே ஆலையம்
வள்ளல் பிரானுக்கு
வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு
சீவன் சிவலிங்கம்
திருமூலர் சொன்னது
உயிர் தான் கடவுள்
இந்த ஜீவன்களுக்குள்ளும்
கடவுள் இன்னும் இறக்கவில்லை
கடவுள் இங்கே
இதை விடுத்து
எங்கே தேடுகின்றாய் மானுடனே?
கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு
ஆலயங்கள் இடிகின்றது
சீவன் சாகிறது
கடவுளிடம் இருந்து
விலகாதே மானுடனே
கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.
மலைபோல் தேங்காய்களை
சபரிமலையில்
விரையமாக்கதே
கடவுளிடம் நேரடியாய் கொடுத்துவிடு
பட்டுப்பூச்சிகளை கொன்று
பட்டு நெய்து
பட்டாபிசேகம் என்னும்
பாபத்தை செய்யாதே
அந்த பணத்தை
பசியோடு இருக்கும் கடவுளுக்கு
பாசமாய் கொடுத்து விடு
நேசமாய் கடவுளுடன்
கூடியிரு
உனக்குள் இருக்கும்
உயிர்தான் கடவுள் என்று
உணர்ந்து விடு
கடவுள்களுடன்
கைகோர்த்துவிடு
கடவுள் என்று சொன்னார்
கடந்து உன்னுள் சென்றுவிடு.
-சின்னா
1 comment:
//கண்ணுக்கு முன்னால்
கடவுள்
காணிக்கையை அவரிடம்
நேரடியாய் கொடுத்துவிடு//
//கருங்கல்லை கடவுள் என்று
வைக்கலில் ஊறிய பசும்பாலை
கல்லின் மேல் உற்றி
கருணையற்றவன் ஆகாதே
உயிருள்ள கடவுளின்
வாய்கள் வறண்டு கிடக்கின்றது.//
பொட்டில் அறையும் வீச்சு வரிகள்! இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் கடவுள் மட்டுமல்ல, கடவுளோடு சேர்ந்து மனிதமும் உயிர் வாழும்! சரிதானே?
இப்போது தான் உங்கள் பிளாக் எனக்கு தெரிய வந்தது. இனி படித்து படித்து பின்னுட்டம் இடுகிறேன், பொறுமையாக!
Post a Comment