Tuesday, June 8, 2010

தமிழ் கட்டும் கோவணம்






எஞ்சியது வெறுமை மட்டும்
அதை எனது தொடர்புக் கருவியான
தமிழில் எழுதுகின்றேன்

இந்தக் கருவி மட்டும்
கர்வத்துடன் இருக்கின்றது
எனது உணர்ச்சிகளுக்கும்
இந்தக் கருவிக்கும்
தொடர்பில்லாமல் போய்விட்டது
நான் அம்மணமாக நிற்கின்றபோதும்
நான் பேசும் மொழி கோவணத்துடன் நிற்கின்றது
பணமும் அதிகாரமும் உள்ளவர்கள்
எனது கோவணத்தை உருவி
நான் பேசும் மொழிக்கு கட்டுகின்றார்கள்
அதைப் பார்த்து
எம்மை கைகொட்டி ஆரவாரம்
செய்ய வற்புறுத்துகின்றார்கள்
ஆனால் எனது பிறப்புறுப்பை
எனது இருகைகளால் பொத்தவேண்டியிருக்கின்றது
என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்

நான் எப்ப சிரித்தேன் என்று நினைவில்லை
அழுகைகள் தான் என்னுடன் கூட வருகின்றது
நான் தமிழில் அழவில்லை
ஆங்கிலம் பிரஞ்சு யேர்மன் எந்த மொழியிலும் அழவில்லை
அதற்கு மொழி இல்லை
கோவணத்துடன் நிற்கும் இந்த மொழியால் அதை புரிந்துகொள்ள முடியாது
எமது காதில் கேட்ட வெடிச்சத்தங்களும் மொழிக்குள் அடங்காது
எமது காதில் கேட்ட கதறல்களும் ஒப்பாரிகளும் மொழியற்றவை
அதற்கு எந்த கெளரவமும் தேவை இல்லை
ஏனெனில் அவை என்னுடன் நிர்வாணமாய் இருக்கின்றது
அழுவதற்கு எந்த மொழியும் தேவையில்லை

2 comments:

Admin said...

சொல்ல வார்த்தைகள் வரவில்லை

தீபிகா(Theepika) said...

தமிழரின்..வெட்கமிகு..வேதனை யதார்த்தத்தை கொதிக்கிற வார்த்தைகளின் சூட்டோடு விசிறியிருக்கிறீர்கள். சுடுமா..
மொழியையும் அரசியலாக்கி
சுய தம்பட்டமடிக்கிற வெற்று வித்தகர்களுக்கு.

தீபிகா.

எம்பெருமான்

உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...