அழகான குளத்தில்
அலையில்லாத
நீரின் நெளிவுகள்
ஆற்றின் ஓரத்தில்
வழைந்து படபடக்கும்
நாணல்கள்
காலைகளில்
வயல் வெளிகளில்
பயின் நுனியில்
இருந்து யோசிக்கும்
பனித்துளிகள்
தேனிக்கள் முட்டும்போது
ஆடும் பூக்கள்
தென்னோலைகளில்
ஊஞ்சல் ஆடும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்
நேராக வர
புடலங்காயில்
தொங்க விட்ட கற்கள்
பச்சைக் கொடியில்
மஞ்சளாய் ஒழிந்து பழுத்த
பாகற் பழங்கள்
வேலிக்குள் நுளையாமல்
கழுத்து மட்டை அடித்த
வெள்ளாடுகள்
தூரத்துப் பனையில்
கள் முட்டியோடு ஏறும்
சீவல் காரன்
முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்
வயல் நடுவில்
திடீர் என்று வளர்ந்த
மஞ்சள் குன்று நெற் சூடுகள்
இலைகளுள் மறைந்தாடும்
கிளி கொத்திய மாம்மழத்தின்
மஞ்சள்
இரவுகளில் தொப்பென்று விழும்
பனம் பழத்தின் சத்தங்கள்
கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்
அலாரத்தின் விழிப்பில்
கலைந்து போன
உலத்தல் கனவு
வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி
சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...
Subscribe to:
Post Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...
10 comments:
கனவில் எழுதிய வரிகள் எல்லாம் பிரிந்து விட்ட தேசத்தின் பொக்கிஷங்கள்...
//வேலை நோக்கி
விரைகின்றது கால்கள்
ஒரு கறுத்த முகத்தை
சுற்று முற்றும் பார்த்து
தோற்றபடி
சன்னலுக்கு வெளியே
வேகமாக ஓடுகிறது
விளம்பரப் பலகைகள்
பயணம் தொடர்கிறது...//
அருமை
பாரட்டுக்கள்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
அருமை
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
தமிழன் கோவை விஜய் மற்றும் கடையம் ஆனந்த் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
உங்கள் பின்னூட்டத்தின் வழி தொடர்ந்து வந்தேன். சுற்றுப்புறத்தைப் பற்றிய நுண்ணிய பார்வை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. பழைய ஞாபகங்களைக் கிளர்த்திய வரிகள்.
//முழு நிலவு பின்னிரவில்
பொன்னிறம் மிளிரும்
தரவைக் கடலில்
றால் பிடிக்கும் படகுகள்
கால்வாயில்
மிதந்து வரும்
குறுனிப் பூக்கள்//
அழகான காட்சி படுத்தல்கள்...வாழ்த்துக்கள் தோழி...
இக்கவிதை கனவைப்பற்றியது அல்ல. நிலம் ஆழ்மனதில் வரையப்பட்டுள்ளதின் ஒரு வெளிப்பாடுதான். தற்சமயம் ஈழம் என்பது இப்படியாக கவிதைகளிலும் மொழியிலும் வரையப்பட்ட நிலப்பரப்பாகிக் கொண்டுள்ளது. ஒரு கற்பிதப்புவியலாக உள்ளது. உங்கள் கவிதைகள் அந்த புவியிலின் நினைவுகளை நுட்பமாக முன்வைக்கின்றன. சேரன் செல்வி போன்ற கவிஞர்களின் கவிதைகளில் வரும் ஈழத்தின் இயற்கை இக்கவிதைகளில் நினைவுட்டப் பட்டள்ளது. அருமை.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் உறவுகளே
ஒவ்வொரு காட்சிகளையும் விடாமல் விழுங்கி வைத்திருக்கிற விழிகள் எல்லாம சேர்த்து உருட்டித் தந்திருக்கிற கவிதை இது. இறுதியில் எல்லாம் பிரிந்த சோகத்தன் வலியில் பணம் தேடியலையும் நகரத்துப் பயணம் அழகற்றதாகவே இருக்கிறது. பயிரில் என்கிற சொல்லில் ரி தவறவிடப்பட்டிருக்கிறது. சரி செய்க.
தீபிகா.
Post a Comment