நெருஞ்சி முட்செடிகள்
மஞ்சாளாய் பூத்துக் குலுங்கியது
ரசிப்பது இயல்பில்லை
செருப்பில்லாத கால்கள்
முட்களையே நினைவுபடுத்தின
மாடப்புறாக்கள்
கூட்டமாக வரும்
வடிவுதான்
இருந்தும் பிடிக்காது
விதைத்த நெல்லை
தின்றழித்துவிடும் கோபம்
நின்று நினைவை உறுத்தும்
தொல்லை இல்லாத
கொக்குகள் பிடிக்கும்
பொழுதுசாயும் நேரம் கூடு திரும்பும்
நாம் வீடு திரும்பும் போது
கூட்டமாக கூடு திரும்பும்
புளு பூச்சிகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
விலங்குகளிலும்
நிறைய பிடிக்கும்
நிறைய பிடிக்காது
பசுவையும் எருதுகளையும்
எப்போதும் பிடிக்கும்
இருந்தும்
இறுதியில் அடிமாடுதானே
சந்தையில் ஒரு நாள்
சிவப்பாக தொங்கும்
விருப்பு வெறுப்புகளுக்கு
நிச்சயம் ஏதேதோ காரணங்கள்
செயலுக்கும் ஏராளமான
காரணங்கள் நியாயங்கள்
காரணமில்லாத பொழுதுகள்
கனவில்லாத நித்திரைகள்
நேற்றும் நாளையும் இல்லா
இன்றய நாட்கள் எதுவும் இல்லை
அப்படி எதுவும் தேவையும் இல்லை?
தேம்பும் போதும்
சிரிக்கும் போதும்
சிலநேரம் கலவியின் உச்சத்தில்
முக்கி முனகும் போதும்
மொழி இழந்த சத்தங்கள்
கவனிக்கப்படுவதில்லை
காரணங்கள் வலுவாக இல்லை
அவளை பார்க்கும் போது
அடிவயிற்றில் இருந்து தொண்டை வரை
ஏதெதோ பிரண்டு உருளுது என்றான்
பின் வாயு மாத்திரை வாங்கி
இரண்டு வேளை சாப்பிட்டான்
காரணங்கள் வலுவாக இல்லை
உலகம் றொம்ப அர்த்தத்துடன்
வேகமாக சுற்ற தொடங்கி விட்டது?
வெளிப்படையான காரணங்கள்
புரிந்து கொள்ள கூடிய காரணங்கள்
இல்லாவிடில்
நேரமில்லை இந்த
சதைகளின் பரிதவிப்புகளுடன் மினைக்கெட
Subscribe to:
Post Comments (Atom)
எம்பெருமான்
உயிரும் குருதியும் ஊற்றி வாழ்வு வேண்டி வளர்த்தயாகத்தில் வாழ்வே தவறி விழுவதுதான் எப்போதும் நிகழ்கின்றது. ஓர் யாக குண்டம் அணைந்த இடத்தில் இருந...
-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலையம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் திருமூலர் சொன்னது உயிர் தான் கட...
-
எஞ்சியது வெறுமை மட்டும் அதை எனது தொடர்புக் கருவியான தமிழில் எழுதுகின்றேன் இந்தக் கருவி மட்டும் கர்வத்துடன் இருக்கின்றது எனது உணர்ச்சிகளுக்க...
-
விண்மீன்கள் கண்ணுக்கு தெரியாத காரிருள் மின்சாரமில்லாததெருக்களில் ஈசல்கள் ஊர்வலம் முகத்திலடிக்கும் வண்டுகள் கண்ணுக்கள் சென்றுவிட்டால் கண்ணீரு...
3 comments:
நீங்கள் எனது பதிவில் பின்னூட்டம் அளித்ததன் மூலமாக இங்கு வர நேர்ந்தது. அதனால் இது ஒரு சம்பரதாயமான வாழ்த்து என்று கருத வேண்டாம்.
நல்ல கவிதைகள் உங்களுக்கு வாய்க்கப் பட்டிருக்கிறது. குறிப்பிட்டு இந்தக் கவிதைதான் என்று சொல்லத் தெரியவில்லை.
வணக்கம் நர்மதா.உங்கள் தளம் வந்தேன்.என் ஊர் சிநேகம் கண்டு சந்தோசம்.என்கிருந்து கொண்டு எழுதுகிறீர்கள்.அருமையான இயல்பான வரிகள்.வலி தெரிந்தவர்களுக்கு அதன் வேதனை கூடுதலாகப் புரியும்.என்னை நெருடிப் போனது சில கவிதைகளும் சில நிழற்படங்களும்.சின்னாவின் கவிதைகள் என் ஊர் பற்றி எரியும் வெப்பத்தைக் கக்கி கண்ணில் பட்டுத் தெறித்தன.இப்போ இந்தக் கவிதையும் அருமை நர்மதா.நாம் விரும்பியோ விரும்பாமலோ சில காரியங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்.மறுக்க முடியாமல் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
யாழ்ப்பாண இயல்புத் தமிழையும் இடையில் சொருகி இருக்கிறீர்கள்.
மனம் மருகி நிற்கிறது.யாழ் தமிழ் எல்லோருக்கும் புரியாது.எங்களுக்கு தேன் சொட்டுத்தான்.இனி அடிக்கடி உங்கள் தளம் வலம் வருவேன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கு நன்றிகள்.
Post a Comment